உலகின் முக்கிய பிரபலத்திடம் துணிவு பாணியில் மோசடி!!

உலகின் முக்கிய பிரபலத்திடம் துணிவு பாணியில் மோசடி!!
X

உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 98 கோடி ரூபாயை இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள உசேன் போல்ட் 2017ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். ஆனாலும் உலகின் அதிவேக மனிதர் இன்றும் அவர்தான்.

இவர் போட்டிகளில் வென்றதன் மூலமும், விளம்பரம் மூலமும் உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரராக திகழ்ந்து வருகிறார். அப்படி ஈட்டிய பணத்தை ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார் போல்ட்.
இந்நிலையில், அந்த முதலீட்டு நிறுவனத்தில் உசேன் போல்ட் 12 மில்லியன் டாலரை அதாவது 98 கோடி ரூபாயை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது கணக்கில் வெறும் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே உள்ளன.

துணிவு படத்தில் மியூச்சுவல் ஃபண்ட் என்று மக்கள் செலுத்தும் பணத்தை வங்கி கொள்ளை அடித்துவிட்டு, இழப்பு ஏற்பட்டுவிட்டதாக கணக்கு காண்பிக்கும். அதுபோல் உசேன் போல்ட் பிரபல நிறுவனத்திடம் பணத்தை இழந்துள்ளார்.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர் ஒருவரின் மோசடியால் முதலீட்டாளர்களின் பணம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊழியர் ஒருவரிடம் அந்த நிறுவனம் விசாரணை செய்து வருகிறது.

உசேன் போல்ட் தற்போது இழந்திருக்கும் தொகை அவருடைய வாழ்நாள் சேமிப்பு. நிறுவனம் நிதியைத் திருப்பித் தராவிட்டால், இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று உசேன் போல்ட் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it