1. Home
  2. தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு!!

காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு மாநிலங்களான நாகாலாந்துஸ மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்டது. கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் களம் கண்ட நிலையில், எதிர்த்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கணிசமான வாக்குகளை பெற்றது.


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு!!


அதனால் அறிவிப்பு வந்த உடனேயே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு!!


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, பேச்சுவார்த்தை சமுகமாக முடிந்தது என்றார்.

மேலும், வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த வேட்பாளர்களுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like