1. Home
  2. தமிழ்நாடு

இனி ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணமா ?

இனி ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணமா ?

தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்பயன்பாடு அளவீடு எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகமாக வருவதால் இதை மாதந்தோறும் கணக்கெடுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். 2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்பயன்பாடு அளவீடு எடுத்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.


இனி ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணமா ?

இந்நிலையில், மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14இன் படி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் செலவு அதிகரித்தாலோ, கொள்முதல் விலை உயர்ந்தாலோ, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப அந்த கூடுதல் செலவை அதே மாதத்தில் நுகர்வோரிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது. இந்த விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களையும், மின்சாரம் தயாரிப்பதற்கு நிலக்கரி வாங்கும்போது ஏற்படும் கூடுதல் செலவினங்களை சரிகட்டவும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இனி ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணமா ?

மாதந்தோறும் வசூலிக்க முடியாத சூழல் ஏற்படுமானால் ஆண்டுக்கு ஒருமுறை என்று கணக்கிட்டு அதை நுகர்வோரிடம் மின்வாரியம் வசூலிக்கலாம் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்கட்டணம் அதிகமாக உள்ளது என்று மக்கள் தெரிவித்து வரும் நிலையில், மின்வாரியத்தின் கூடுதல் செலவுகளையும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று கூறுவது இது மக்களுக்கு மேலும் அதிக சுமையாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like