ஒடிசா முதலமைச்சரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!!...
ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும்இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார்.
ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அப்போது விளையாட்டு தொடர்பான மேம்பாடுகள் குறித்து பேசியதாக தெரிகிறது.
newstm.in