ஐசிசி தரவரிசை...கோலி முன்னேற்றம்!!!

ஐசிசி தரவரிசை...கோலி முன்னேற்றம்!!!
X

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர்கள் கோலி, சிராஜ் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.


ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உட்பட 283 ரன்கள் விராட் கோலி குவித்தார். இதனால் அவர் 4வது இடத்துக்கு முன்னேறினார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்ரிக்க வீரர் ரஸ்ஸி வான் டெர் டசன், 3வது இடத்திலும் தென் ஆப்ரிக்கா வீரர் டி காக் உள்ளனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்தில் உள்ளார்.


ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டிரெண்ட் பவுல்ட் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா வீரர் ஹேஸ்லேவுட் 2வது இடத்திலும், இந்திய வீரர் சிராஜ் 3வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்திலும் , ஆப்கான் வீரர் முகமது நபி 2 வது இடத்திலும் , வங்கதேச வீரர் மெஹதி ஹசன் 3வது இடத்திலும் உள்ளனர்.

newstm.in

Next Story
Share it