1. Home
  2. தமிழ்நாடு

இவ்வளவு பெரிய நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

இவ்வளவு பெரிய நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

உலகம் முழுவதும் பணவீக்கம் என்ற மாய அரக்கன் அனைத்தையும் அசைத்து கொண்டிருக்கிறான். சிறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அண்மையில் பல்வேறு நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களும் இணைந்துள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பொறுத்த அளவில் ஏற்கெனவே கடந்த அக்டோபர் மற்றும் ஜூலை மாதங்களில் ஆட்குறைப்பை அறிவித்தது. இந்நிலையில் இதனையடுத்து மீண்டும் ஆட்குறைப்பை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. தற்போதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இவ்வளவு பெரிய நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்பு இந்த எண்ணிக்கையில் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களையே பாதித்தது. ஆனால் இம்முறை அதிக அளவில் பாதிப்புகள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனத்திலிருந்து இன்றைய தினம் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் சுமார் 30,000 பேர் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதன் ஊழியர் ஒருவர் கூறுகையில், “தொழில்நுட்ப உலகத்திற்கு இது போதாத காலம். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிக அளவில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த முறை பொறியியல் பிரிவுகளிலிருந்து ஆட்குறைப்பு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபரில் சுமார் 1,000 பேர் வரை நிறுவனம் பணி நீக்கம் செய்தது.

அதன் பின்னர் கூடுதலாக ஆட்கள் எடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. ஆனால் அப்படி எந்த ஆட்களையும் நிறுவனம் எடுக்கவில்லை. இனி வரும் காலங்களில் வேலைக்கு எடுக்கப்படும் ஆட்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறையலாம். எங்கள் பணி நிச்சயமற்றதாக, சமூக பாதுகாப்பற்றதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

வரும் 24ம் தேதியன்று மைக்ரோசாப்ட் இரண்டாவது காலாண்டு குறித்து தனது அறிக்கையை வெளியிடும். இந்நேரத்தில் ஆட்குறைப்பில் ஈடுபட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


Trending News

Latest News

You May Like