1. Home
  2. தமிழ்நாடு

வண்டலூர் பூங்கா இன்று திறந்திருக்கும்!!

வண்டலூர் பூங்கா இன்று திறந்திருக்கும்!!

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு காரணங்களுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும். செவ்வாய்க்கிழமையான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவர். இதன்காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.


வண்டலூர் பூங்கா இன்று திறந்திருக்கும்!!

இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்காவும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். அந்த பூங்காவும் இன்று திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்கா காலை 8 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று காலை 8 மணிக்கே திறக்கப்பட்டுள்ளது. இன்று பூங்காவுக்கு 60,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like