அதிரடி உத்தரவு! பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்!!

அதிரடி உத்தரவு! பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்!!
X

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் திரையரங்குகள், கடைகளில் சானிடைசைர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முறையாக விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் இன்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it