1. Home
  2. தமிழ்நாடு

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி.. மத்திய அரசு மீது மம்தா சாடல்..!

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி.. மத்திய அரசு மீது மம்தா சாடல்..!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சாகர்தீகி நகரில் நடந்த நிர்வாக ரீதியிலான மறுஆய்வு கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மேற்கு வங்கம், மத்திய அரசின் நிதி உதவி இன்றி மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் இந்த வேற்றுமை? மத்திய அரசின் எந்தவித உதவியும் இன்றி இதனை நாங்கள் செய்து வருகிறோம்.


மத்திய அரசு எங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும். ஆனால், நிதியை விடுவிக்காமல் உள்ளது. பல முறை இந்த விவகாரம் பற்றி எடுத்து உரைத்தும் அதில் பலனில்லை. இந்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது மத்திய அரசின் தனிப்பட்ட நிதியல்ல. அது மாநிலத்தில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான உரிமை.

வங்காள மக்களுக்கான அரிசியை தராமல் மத்திய அரசு இழப்பை ஏற்படுத்த முடியாது. வங்காள மக்கள் அதிகம் சாப்பிடக் கூடிய உணவு அரிசி. அதிலும், ஏழைகள் அதிகம் உட்கொள்ள கூடியது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி கிடைக்கிறது” என மத்திய அரசை கடுமையாக சாடினார்.

Trending News

Latest News

You May Like