ஜோதி வடிவில் காட்சி அளித்த ஐயப்பன்… பக்தர்கள் பரவசம்!!

ஜோதி வடிவில் காட்சி அளித்த ஐயப்பன்… பக்தர்கள் பரவசம்!!
X

சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

பந்தள மகராஜா வழங்கிய தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தளத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி புறப்பட்டது. அது பம்பை, சரங்கொத்தி வழியாக இன்று மாலை சபரிமலை சன்னிதானம் வந்தடைந்தது.

சரங்கொத்தியிலும் சன்னிதானம் கொடிமரத்தடியிலும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பிலும் கேரள அரசின் தேவஸ்வம் போர்டு துறை, காவல்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகள் சார்பிலுல் வரவேற்பு அளிக்கப்பட்டது.தொட.ர்ந்து திருவாபரண பெட்டியை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையிலான நம்பூதிரிகள் குழுவினர் ஐயப்பனுக்கு அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

மகாதீபாரதனை காட்டிய பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். ஐயப்பன் மலையில் ஜோதியாய், வானில் நட்சத்திரமாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறான் என்பது ஐதீகம்.

மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரச கோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு இரவு 08.45 மணிக்கு "மகர சங்கரம" பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரவு 11:30 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்படும்.

newstm.in

Next Story
Share it