1. Home
  2. தமிழ்நாடு

சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி!!

சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி!!

ஈரோடு, திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் பெரியவடமலைபாளையம் மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சேவல்கள் துன்புறுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தால் அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதனையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடைபெறக்கூடாது, சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சேவல்களை துன்புறுத்தக்கூடாது, சேவல்களின் கால்களில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் கட்டக்கூடாது, சேவல் சண்டை நடைபெறும் இடத்தில் காவலர் ஒருவரும், கால்நடை மருத்துவரும் இருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பெருமைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like