அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர் தொடர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பரில் உடல்நல பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர் நேற்று (13-ம் தேதி) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், இன்று மீண்டும், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.