1. Home
  2. சினிமா

மனநலம் குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

மனநலம் குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

கடந்த ஆண்டு நடிகை ஸ்ருதி ஹாசன், மனநலப் பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவது மற்றும் அவற்றை சரி செய்வது எளிதான விவகாரம் அல்ல என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அண்மையில், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள 'வால்டர் வீரய்யா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஸ்ருதி ஹாசன் கலந்துக் கொள்ளவில்லை. அது அவரது மனநல பிரச்னைகள் குறித்த பல ஊகங்களுக்கு வழிவகுத்தது.

தனது மனநலம் குறித்த செய்திகளை கடுமையாக சாடிய அவர், தாம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுதான் அவர் வால்டர் வீரய்யா விழாவில் கலந்துக் கொள்ளாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


மனநலம் குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!


ஸ்ருதிஹாசனுக்கு ‘மனநலப் பிரச்னைகள்’ இருப்பதாக வெளியான செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்த அவர், "நல்ல முயற்சி!! மேலும் நன்றி, நான் எனது வைரஸ் காய்ச்சலில் இருந்து நலமாக மீண்டு வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற தவறான தகவல்கள் மற்றும் அதிகப்படியான நாடகமாக்கல் விஷயங்கள் மனநலம் பற்றி பேச மக்களை பயப்பட வைக்கிறது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மனநலம் குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!


தாம் எப்போதும் ஒரு மனநல ஆலோசகராக இருப்பதாகவும், எல்லா வகையிலும் தன்னைக் கவனித்துக்கொள்வதை ஊக்குவிப்பேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உங்களை நீங்களே சரிசெய்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று ரசிகர்களிடம் கூறியுள்ள ஸ்ருதிஹாசன் முடியவில்லை எனில் ஒரு நல்ல மனநல ஆலோசகரிடம் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like