1. Home
  2. தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு நேரக்குறைப்பா? - அதிகாரிகள் விளக்கம்!!

ஜல்லிக்கட்டு நேரக்குறைப்பா? - அதிகாரிகள் விளக்கம்!!

மதுரையில் ஜனவரி 15,16,17 தேதிகளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்களும் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.

இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு டோக்கன் தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டோக்கனில் போட்டியாளர், காளை உரிமையாளர் பெயர் மற்றும் போட்டோ, அனுமதி சீட்டு எண், போட்டி நடைபெறும் இடம், கைபேசி எண், ஆதார் எண் ஆகிய விபரங்களுடன் சேர்த்து QR code இணைக்கப்பட்டுள்ளது.


ஜல்லிக்கட்டு நேரக்குறைப்பா? - அதிகாரிகள் விளக்கம்!!

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போல் நடைபெறும் நேரங்களிலேயே நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். எப்போதும் போல காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என விளக்கமளிக்கப்படுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like