திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
திருப்பதி மலையில் தங்கும் அறைகளில் 172 அறைகளின் வாடகையை தேவஸ்தான நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகரித்தது.
தேவஸ்தானத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி மலையில் செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், திருப்பதி மலையில் சுமார் 7500 அறைகள் உள்ளன. அவற்றில் நான்காயிரம் அறைகள் சாதாரண பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
மீதமுள்ள மூன்றாயிரத்து ஐநூறு அறைகள் விஐபி பக்தர்கள் மற்றும் பொருளாதார வசதி படைத்த பக்தர்கள் ஆகியோரின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நாராயணகிரி கட்டிட வளாகத்தில் உள்ள அறைகள் உட்பட 172 அறைகள் சமீபத்தில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டன. அவற்றில் தற்போது வாட்டர் ஹீட்டர், தரமான கட்டில், மெத்தை, ஏர் கண்டிஷன் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே அவற்றின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் தேவஸ்தானத்தின் இந்த முடிவை தவறு என்று விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் சாதாரண பக்தர்களின் தங்கும் அறை வாடகையை உயர்த்தவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
newstm.in