1. Home
  2. தமிழ்நாடு

உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் நாளை தொடக்கம்!...

உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் நாளை தொடக்கம்!...

உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

வாரணாசியில் இருந்து அசாமின் திப்ருகர் வரை வங்கதேசம் வழியாக கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளில் 51 நாட்கள் பயணிக்கும் சொகுசு நதிக் கப்பல் நாளை தனது முதல் பயணத்தை தொடங்குகின்றது. உலகின் மிக நீண்டதூர நீர்வழிப்பாதை சொகுசு கப்பல் பயணமாக கருதப்படும் இதற்கு ‘எம்வி கங்கா விலாஸ்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் 27 ஆறுகளைக் கடந்து 4,000 கி.மீ தூரம் வரை இந்த கப்பல் பயணிக்க உள்ளது. உலகின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வனச்சரணாலயங்கள் உள்ளிட்ட 50 சுற்றுலாத் தலங்களை இந்த கப்பலில் பயணிக்கும் பயணிகள் பார்த்து ரசிக்க முடியும்.


உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் நாளை தொடக்கம்!...



வாரணாசியில் தொடங்கும் கப்பல் பயணம் பீகாரின் பாட்னா, ஜார்க்கண்டின் சாஹிப்கன்ஞ், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, வங்கதேசத்தில் தாகா, அசாமில் கவுகாத்தி ஆகிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.


நாளை வாரணாசியில் இருந்து பயணத்தை தொடங்கும் இந்தக் கப்பல் மார்ச் 1ம் தேதி திப்ருகார் சென்று அடையும். இந்த கப்பலில் இசை, கலாசார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, 5 ஸ்டார் ஓட்டல் என பல்வேறு வசதிகள் உள்ளன.


உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் நாளை தொடக்கம்!...



இந்த கப்பலானது 62 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டதாகும். 3 தளங்களை கொண்ட இந்த கப்பலில் 36 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 18 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கங்கா விலாஸ் கப்பலின் பயணத்தை பிரதமர் மோடி காணொலி மூலமாக நாளை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like