1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு..!

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு..!

தமிழகத்தில், பணிக்கு தகுதியான படிப்பை விட கூடுதலாக உயர் கல்வி முடித்த ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் வகிக்கும் கல்வித் தகுதிக்கு அதிகமாக ஏற்கனவே படித்திருந்தால் அவர்களுக்கு உரிய விதிப்படி ஊக்க ஊதியம் வழங்கப்படும். பணியில் சேர்ந்த பிறகு உயர்கல்வி படிப்பதற்கு தாங்கள் பணியாற்றும் துறையின் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெற்று படிப்பை முடிப்பவர்களுக்கு மட்டும் ஊக்க ஊதியம் வழங்க பரிந்துரை செய்யப்படும்.

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு..!

இந்நிலையில், முன் அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்துவிட்டு ஊக்க ஊதியம் கேட்போருக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று கடந்த 2020-ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே முன் அனுமதி பெற்றவர்களுக்கு மூத்த ஊதிய பரிந்துரையை மாவட்ட கல்வி அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து ஊக்க ஊதியம் தொடர்பாக பல கோரிக்கைகள் இருந்த நிலையில் தற்போது தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் முறைப்படி ஊக்க ஊதியம் பெற தகுதியானவர்களின் அனைத்து விவரங்களையும் அனுப்புமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like