மதுபிரியர்களே உஷார்...! கொஞ்சம் குடித்தாலும் ஆபத்து தான்!!!
மது குடிப்பதால் 7 வகையான புற்றுநோய் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு ‘தி லான்செட் பப்ளிக் ஹெல்த்’ என்ற இதழில் வெளியிட்ட கட்டுரையில், ‘ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் மது குடிக்கலாம் என்றும், குறைவான அளவு மது குடித்தால் ஒன்றும் செய்யாது என்று கூறும் கருத்தும் ஏற்க கூடியது அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.
மது குடிப்பதால் நன்மை ஏற்படும் என்று எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது. மேலும் மது குடிப்பதால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோ8ய், கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற 7 வகை புற்றுநோய் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மது பானம் என்பது சாதாரண பானம் வகையை சேர்ந்தது அல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலுக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது மதுபானம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
விலை உயர்ந்ததாக மதுவாக இருந்தாலும் அவற்றை சிறிய அளவில் குடித்தாலும் கூட புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மதுபானம் குடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர அதிகவாய்ப்புள்ளதாம்.
நீங்கள் எவ்வளவு மது குடிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; கொஞ்சம் குடித்தால் கூட பாதிப்புதான். அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது என்று கூறப்பட்டுள்ளது.எனவே, நலம் பயக்கும் என்று எந்த காரணத்தை குறிப்பிட்டும் மது குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் மது குடிக்கிறார்களாம். இப்பகுதியில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புற்றுநோய் பாதிப்பு அபாயத்தில் உள்ளனர். மது குடிப்பதால் அதிகளவில் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
newstm.in