கண் கலங்கிய சமந்தா!... என்ன நடந்தது ?
எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என நடிகை சமந்தா உருக்கமாக தெரிவித்தார்.
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கடந்த 4 மாதங்களாக அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்தார். இடையே அவரது யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆனபோது மட்டும் அப்படத்திற்காக இரண்டு பேட்டிகளைக் கொடுத்திருந்தார்.
அதில் கடந்த சில மாதங்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறி அழுததை பார்த்து அவரது ரசிகர்கள் மனமுடைந்து போயினர். இதையடுத்து சிகிச்சையை தொடர்ந்து வந்த சமந்தா, புத்தாண்டுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்திற்கு ஸ்டைலாக வந்திருந்த சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. இந்நிலையில், இன்று சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள புராண கதையம்சம் கொண்ட சாகுந்தலம் என்கிற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் சமந்தாவும் கலந்துகொண்டார். நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்கு பின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால், ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்து மாஸ் எண்ட்ரி கொடுத்தனர். நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குனர் குணசேகர், படத்தில் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி பேசினார்.
அவரின் பேச்சைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார். சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், இறுதியில் தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்ததாக குணசேகர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய சமந்தா, இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன் என்றார். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும், அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது என்று கூறினார்.
வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் ஒன்று மட்டும் மாறாது என்றார். அது நான் சினிமாவை நேசிக்கிறேன், சினிமா என்னை மீண்டும் நேசிக்கிறது என்று சமந்தா குறிப்பிட்டார். எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்றார்.
சமந்தா அழும் வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்த அவரது ரசிகர்கள், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், என்று ஆதரவு பதிவிட்டுள்ளனர். குணசேகர் தயாரித்து இயக்கியுள்ள இப்படம் இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இது பிப்ரவரி 17 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
newstm.in