1. Home
  2. சினிமா

சூர்யாவின் அடுத்த படம் "வீர்"?

சூர்யாவின் அடுத்த படம் "வீர்"?

சூர்யாவின் அடுத்த படத்திற்கு வீர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.





நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமாகும்.


200 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், சூர்யா 42 படத்தின் இந்தி திரையரங்க, சாட்டிலைட், டிஜிட்டல் உரிமையை பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் கடா ரூ.100 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது மறுபிறவி கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அதிரடி சாகசப் படம். இந்த படத்திற்கு ஒரு பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த தலைப்பை தான் வைக்க வேண்டும் என எண்ணிய படக்குழு படத்திற்கு 'வீர்' என்கிற பெயரை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சூர்யாவின் அடுத்த படம் "வீர்"?



ஆனால் படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு குறித்த எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய அனைத்து படங்களுமே 'வி' என்கிற எழுத்தில் தான் பெயரிடப்பட்டு இருந்தது.


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த விஸ்வாசம், வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்கள் V என்கிற எழுத்தில் தான் ஆரம்பமானது. தற்போது சூர்யாவின் சூர்யா 42 படத்திற்கும் 'V' என்கிற எழுத்தில் தான் தலைப்பு வைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.


சூர்யாவின் அடுத்த படம் "வீர்"?



சூர்யாவின் திரைப்பயணத்தில் இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like