கல்லூரிக்கு செல்லாமல் கபடி விளையாடி கொண்டிருந்த மகனை பெற்றோர் கண்டித்தது ஒரு குற்றமா ?
சிவகங்கை மாவாட்டம் திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த அல்லிநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி நாராயணமூர்த்தி. இவரது இளைய மகன் முத்துராஜா (20). இவர் மதுரை செந்தமிழ் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் ஒரு விளையாட்டு வீரராகவும் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இவர் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் கபடி விளையாடி வந்து உள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராஜா பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினார்கள். அப்போது அவர் அருகில் இருந்த வயலில் விஷம் குடித்து மயக்க நிலையில் அவர் கிடந்து உள்ளார். உடனே அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே முத்துராஜா இறந்துவிட்டதாக கூறி உள்ளார்.
இது குறித்து அவரது தந்தை திருப்புவனம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.