1. Home
  2. தமிழ்நாடு

போட்டித் தேர்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்க சிஇஓ அனுமதி அளிக்கலாம்..!

போட்டித் தேர்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்க சிஇஓ அனுமதி அளிக்கலாம்..!

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பதற்கு இனிமேல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி ஆணையகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.


மேலும், இதற்கான விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து ஆணையகரத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக, இனிவரும் காலகட்டங்களில் தங்கள் மாவட்ட அலகுகளுக்குள்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளை போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு முன் அனுமதி வழங்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like