1. Home
  2. தமிழ்நாடு

விஷம் கலந்திருப்பார்கள் என்று டீ குடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர்!!

விஷம் கலந்திருப்பார்கள் என்று டீ குடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர்!!

டிஜிபி அலுவலகத்திற்கு போராட்டத்திற்கு சென்ற உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் கலந்திருக்கும் எனக்கூறி குடிக்க மறுத்து விட்டார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ள நிலையில், கட்சியின் ட்விட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் என்பவர் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை போலீசார் கைது செய்தனர்.

அவரை விடுவிக்கக்கோரி டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அகிலேஷ் யாதவ் சென்றார். அவருடன் கட்சி தொண்டர்களும் சென்றிருந்தனர். முன்னாள் முதலமைச்சரான அவருக்கு, போலீஸார் குடிக்க தேநீர் கொடுத்தனர்.


விஷம் கலந்திருப்பார்கள் என்று டீ குடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர்!!

ஆனால், தேநீரில் விஷம் வைத்து விடுவார்கள், எனக்கு தேவையான தேநீரை நானே வாங்கி குடித்து கொள்வேன். உங்களுக்கான தேநீரை நீங்களே குடியுங்கள் என போலீசாரிடம் கூறினார்.

அதன்பின்பு, காவல் நிலையத்திற்கு வெளியே சென்று தனக்கு தேநீர் வாங்கி வரும்படி கட்சி தொண்டர் ஒருவரிடம் அவர் கூறினார்.

சமாஜ்வாடி கட்சி தொண்டரான மணீஷ் ஜகனை லக்னோ போலீசார் கைது செய்து இருப்பது கண்டனத்திற்கு உரியது. வெட்கக்கேடானது. உடனடியாக அவரை போலீசார் விடுவிக்க வேண்டும் என ட்விட்டரில் அகிலேஷ் பதிவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like