1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - விசாரணை

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - விசாரணை

மேற்கு வங்கத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக மத்திய குழுக்கள் விசாரணை நடத்தினர்.


மேற்கு வங்கத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளுக்கும் வீடு ஒதுக்கப்பட்டு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நேரடி விசாரணை நடத்த மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக துணை செயலாளர் சக்திகாந்தி சிங் தலைமையிலும், மற்றொரு அதிகாரி சைலேஷ்குமார் தலைமையிலும் 2 குழுக்கள் அமைக்கப்பட்டன.


பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - விசாரணை


அவற்றில், சக்திகாந்தி சிங் தலைமையிலான குழு, மால்டா மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டது. கிராம மக்களுடன் பேசியது. அவர்களுடன் மாவட்ட அதிகாரிகளும் சென்றனர்.

சைலேஷ் குமார் குழு, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. இந்த ஆய்வு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.


பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - விசாரணை


ஆய்வின் அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like