தமிழகம் அல்ல...தமிழ்நாடு தான்!....ஜெயக்குமார் ஆதரவு....
அதிமுகவினர் அண்ணா வழி வந்தவர்கள் என்பதால் தமிழ்நாடு என்ற பெயரையே ஆதரிக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டிற்கு என்று தனித்தன்மை உண்டு என்றார். தமிழ்நாடு என்றுதான் அழைக்கப்பட வேண்டுமென 1963லேயே குரல் கொடுத்தவர் அண்ணா; அவரது வழியில் வந்தவர்கள் நாங்கள் என்பதால் என்பதால் தமிழ்நாடு என்ற பெயரையே ஆதரிக்கிறோம் என்று கூறினார்.
பெயர்மாற்றம் மூலம் என்ன கிடைக்கப் போகிறது என்று நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு அண்ணா, கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலமாகவும், நாடாளுமன்றம் என்பதை லோக் சபா என்று மாற்றியதன் மூலம் என்ன கிடைத்ததோ, அதே அனுகூலம் தான் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்று பதிலளித்தார் என்பதை ஜெயக்குமார் நினைவூட்டினார்.
தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும் என்று அண்ணா தெரிவித்துள்ளார். இதன்மூலம் நமது மாநிலத்திற்கு தனித்தன்மை இருக்கிறது என்று கூறிய அவர் தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்றார்.
newstm.in