1. Home
  2. தமிழ்நாடு

வந்தே பாரத் ரயிலை ஓட்டிய முதல் பெண்!!


வந்தே பாரத் ரயிலை ஓட்டிய முதல் பெண் சுரேகாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்பவர் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


வந்தே பாரத் ரயிலை ஓட்டிய முதல் பெண்!!

இந்த ரயில் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சோலாப்பூரில் இருந்து மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில்வே நிலையம் வரை சுரேகா யாதவ் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்கியுள்ளார்.

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுரேகா யாதவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்குவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like