1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றதால் மனைவி, மாமியார் கொலை!!


மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதால், மனைவி, மாமியாரை புதுமாப்பிள்ளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், ருக்மணி என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து முதலிரவில் சரவணன், பெண்ணிடம் எதுவும் பேசாமல் தூங்கியுள்ளார்.

இதேபோன்று சில நாட்கள் அவர் நடந்து கொண்டதால், மாப்பிள்ளை மீது பெண்ணின் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்று ஆண்மை பரிசோதனை செய்துள்ளனர்.


மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றதால் மனைவி, மாமியார் கொலை!!


இந்த விவகாரம் மறுநாள் சரவணனுக்கு தெரியவர அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரம் அடைந்த சரவணன், கத்தியால் மனைவி ருக்மணியையும், மாமியார் ரமாதேவியையும் குத்தியுள்ளார்.

இதில் மனைவி மற்றும் மாமியார் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். இந்த கொலைக்கு சரவணனின் தந்தை பிரசாத்தும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த சம்பவம குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரவணன், அவரது தந்தை பிரசாத் ஆகியோரை கைது செய்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like