1. Home
  2. தமிழ்நாடு

போலாம் ரைட்...234 தொகுதிகளில் வலம் வரும் திமுக இருசக்கர வாகனப் பேரணி..!

1

இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி அக்கட்சி சார்பில் இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளது. அந்தப் பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் புதன்கிழமை தொடங்கி வைத்தார். இப்பேரணி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 8,647 கிலோமீட்டர் தூரம் செல்லும். மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் பேரணி அடுத்த மாதம் சேலத்தில் நிறைவடைய உள்ளது.

இன்று தொடங்கி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான நவம்பர் 27-ம் தேதி வரை இரு சக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.  மொத்தம்  188 இரு சக்கர வாகனங்கள் இந்த பிரச்சார பயணத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இதில் கலந்து கொள்பவர்களுக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு, தங்குமிடம், தலைக்கவசம், கொள்கை முழக்க டி-ஷர்ட், வாகனக் கொடிக்கம்பம், டிராவல் பேக், முதலுதவி சிகிச்சை மெடிக்கல் கிட், சோப்பு, சீப்பு, பேஸ்ட் கிட், குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் திமுக இளைஞரணி சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.

திமுக ரைடர்ஸ் குழுவில் இணைந்து தமிழகமெங்கும் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஷூ கட்டாயம் அணிய வேண்டும், கருப்பு அல்லது ஜீன்ஸ் பேண்ட் அணிய வேண்டும். ஓட்டுநர் உரிமத்தின் நகலைக் கொடுக்க வேண்டும். வாகன உரிமைச் சான்று நகல் கொடுக்க வேண்டும். வாகனக் காப்பீட்டு சான்று நகல் தர வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.13 நாட்களில் 8,647 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like