சென்னை மக்களே உஷார்..!! அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆணை..!

சென்னையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்த 12,551 வழக்குகள் தீர்க்கப்பட்டு சுமார் ரூ.13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.