சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்!

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 164 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் அணியில் வார்னர் (28 ரன்கள்), மணீஷ் பாண்டே (29 ரன்கள்),பிரியம் கார்க் (51 ரன்கள்),அபிஷேக் ஷர்மா (31 ரன்கள்) எடுத்தனர்.
தோனி தலைமையிலான சென்னை அணி 164 ரன்களை சேஸ் செய்யும் முனைப்பில் களத்தில் இறங்கியது. ஆரம்பம் முதலே சென்னை சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஜடேஜா 50 ரன்களை குவித்து ஆறுதல் கொடுத்தார். இருபது ஓவர் முடிவில் 157 ரன்களை எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இதன்மூலம் சென்னை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
newstm.in