உஷார்! தமிழ்நாட்டிற்கு வரப்போகும் பெரிய ஆபத்து!!
2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 14 மாநிலங்களில் உட்கட்டமைப்பு இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் என்றும், அதில் தமிழ்நாடும் இடம் பிடித்திருக்கிறது எனவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
காலநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதற்கு காரணம் மனிதர்களாகிய நாம்தான். மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுக்களால் காலநிலை தொடர்ந்து இயல்பை இழந்து வருகிறது. இதன்காரணமாகவே மோசமான வெள்ளம், பருவமழை தப்பிப் பெய்வது, அதீத வெய்யில், கடும் குளிர் ஏற்படுகிறது.
இந்நிலையில் காலநிலை மாற்றம் குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த எஸ்டிஐ என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2050ஆம் ஆண்டில் 2,600க்கு அதிகமான மாநிலங்கள், மாகாணங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மிகவும் கவலை தரும் விஷயம் என்னவென்றால், பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியாவின் 9 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 9ஆம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. பட்டியலில் உள்ள மாநிலங்களில் வெள்ளம், காட்டுத்தீ, வெப்ப அலை மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற காலநிலை மாற்றம் ஏற்படும்.
இந்தியாவை பொறுத்தவரை பீகார் முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் 2ஆவது இடத்திலும், அசாம் 3ஆவ இடத்திலும் இருக்கின்றன. அதே போல், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களிலும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதற்கு உதாரணம் அண்மையில் பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு. நாட்டின் சுமார் 30% கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுபோன்ற வெள்ள பாதிப்பு முன்பு ஏற்பட்டது கிடையாது. எனவேதான் காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
newstm.in