1. Home
  2. தமிழ்நாடு

உலக கோப்பை கால்பந்து தேதி மற்றும் மைதானங்களின் பட்டியல் வெளியீடு!

1

 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பிபா உலக போப்பை கால்பந்து தொடர் உலக புகழ் பெற்றவை. அதன்படி அடுத்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ளது.

FIFA

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துகின்றன. இந்நிலையில், 2026 உலகக் கோப்பைக்கான அட்டவணை விவரத்தை பிபா வெளியிட்டுள்ளது. மேற்கண்ட 3 நாடுகளில் உள்ள 16 நகரங்களில் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டியானது மெக்சி நாட்டின் அஸ்டெகா மைதானத்தில் 2026, ஜூன் 11-ம் தேதி நடைபெறுகிறது. அரையிறுதி போட்டிகள் அமெரிக்காவின் டால்லாஸ், அட்லான்டா ஆகிய நகர்களில் நடைபெறுகின்றன. 3-ம் இடத்திற்கான போட்டிகள் அமெரிக்காவின் மியாமி நகரிலும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப் போட்டி 2026 ஜூலை 19-ம் தேதி நடைபெறுகிறது.



2026 உலக கோப்பை தொடரில் 13 போட்டிகள் கனடாவிலும், 13 போட்டிகள் மெக்சிகோவிலும், மீதமுள்ள 80 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள 11 நகரங்களில் நடைபெறவுள்ளன. அமெரிக்காவில் கடைசியாக 1994-ம் ஆண்டு தான் பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அதன் பின்னர் 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த விளையாட்டு திருவிழா அமெரிக்காவில் நடக்கவுள்ளது.

Trending News

Latest News

You May Like