நடிகை கார்த்திகாவை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை இவர் தான்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதா. இவர் 80-ஸ் காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக திகழ்ந்தார் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
இவருடைய மூத்த மகள் கார்த்திகா.இவர் கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்த கார்த்திகா, அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவிலிருந்து விலகி, தனது தந்தையின் பிசினஸை கவனித்துக் கொண்டு வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் கார்த்திகாவுக்கு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிகாரபூர்வமாக நடிகை கார்த்திகாவே அறிவித்தும் இருந்தார். திருமண நிச்சயம் ஆனதில் இருந்து மாப்பிள்ளையின் புகைப்படத்தை வெளிப்படுத்தாமல் இருந்த கார்த்திகா தற்போது மாப்பிள்ளை ரோஹித் மேனனுடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ரோஹித் மேனனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து, "உன்னை சந்திக்க வேண்டும் விதி எழுதப்பட்டுள்ளது... உன்னை விரும்பியது ஒரு மேஜிக்காக நிகழ்ந்தது... உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது" கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகா மேனனுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் ஹார்ட், ஸ்மைலி எமோஜிக்களால் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.