அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை… மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த இரண்டு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.183 குறைந்து, ரூ.4,680 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்து ரூ.65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.65,400 ஆகவும் உள்ளது.
newstm.in