1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் மர்ம மரணம்!!

பிரபல நடிகர் மர்ம மரணம்!!

பிரபல தொலைக்காட்சி நடிகர், ஹோட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய நடிகர் நித்தேஷ் பாண்டே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான, மஞ்சிலின் அபானி அபானி, சாயா, ஜஸ்தாஜூ, துர்கேஷ் நந்தினி போன்றவற்றில் நடித்துள்ளார். மேலும், அவர் ஓம் சாந்தி ஓம், கோஸ்லா கா கோஸ்லா, பதாய் தோ, ஷாதி கே சைட் எபெக்ட்ஸ் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

நாசிக் நகரில் இகத்பூரி பகுதியில் ஓட்டல் ஒன்றில் பிரபல நித்தேஷ் தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் திடீரென மரணம் அடைந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார், ஓட்டல் பணியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிரபல நடிகர் மர்ம மரணம்!!

முதல் கட்ட விசாரணையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து இருக்கக்கூடும் என காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுக்காகவும் காத்திருக்கிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.

சமீபத்தில் தொலைக்காட்சி நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் மற்றும் நடிகை வைபவி உபாத்யாய் ஆகியோர் மறைந்த நிலையில், இவரும் மறைந்தது தொலைக்காட்சி துறையினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like