1. Home
  2. தமிழ்நாடு

பப்புவா நியூ கினியா நாட்டு தேசிய மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

பப்புவா நியூ கினியா நாட்டு தேசிய மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

பப்புவா நியூ கினி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற இந்திய- பசிபிக் தீவுகளுக்கான கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். இதற்கிடையே, பப்புவா நியூ கினி நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பே உடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், பப்புவா நியூ கினியின் தேசிய மொழியான டொக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டத் திருக்குறள் திருக்குறள் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில், அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநர் சுசீந்திரன, முத்துவேல் புத்தகத்தை மொழி பெயர்த்த அறிஞர் சுபாஷ் சசீந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார். சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார்.

பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது” என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like