1. Home
  2. தமிழ்நாடு

நீண்ட நேரம் கணினி முன் வேலை செய்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

நீண்ட நேரம் கணினி முன் வேலை செய்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

தினசரி வேலையில் உங்கள் கண்கள் மங்கலாக இருப்பதையும், பார்வை மோசமாக இருப்பதையும் உங்களால் உணர முடிகிறதா?செய்தித்தாளில் இருக்கும் சிறிய எழுத்துக்களைப் படிக்க உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறதா? ஸ்மார்ட் போன் மற்றும் கணினியில் நீண்ட நேரம் வேலை செய்வது மற்றும் பார்ப்பது, தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பது, மோசமான உணவு பழக்கவழக்கம் நம்முடைய பார்வையை மோசமான முறையில் பாதிக்கும் தெரியுமா?

பெரியவர்களுக்கு 30 வயதிலிருந்து 40 வயதின் மத்தியில் கண்பார்வை பிரச்சனை ஏற்படத்தொடங்குகிறது. ஒரு சிலருக்கு அவர்களின் இளம் வயதில் கூட பார்வை குறைபாடு பிரச்சனைகள் உருவாகின்றன. தினசரி வாழ்க்கைக்கு மூக்கு கண்ணாடியின் பயன்பாடு தேவைப்படுகிறது.

நீண்ட நேரம் கணினி முன் வேலை செய்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

கண்களில் பார்வை குறைபாடு, அடிக்கடி ஏற்படக்கூடிய தலைவலி, எழுத்துக்களை ஒழுங்காக படிக்க முடியாமல் இருப்பது இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம். கண்களை சரியாக பராமரிப்பது மற்றும் வழக்கமான கண் பரிசோதனைகளுக்குச் செல்வது முக்கியம் என்றாலும், உங்கள் கண்பார்வையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சில பாதுகாப்பான மற்றும் பயனுள்ள இயற்கையான வழிமுறைகள் உள்ளது அவற்றை பற்றி பார்ப்போம்.

உங்கள் உணவில் ஆரோக்கியமான நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பெரும்பாலும் பல உடல் பிரச்சனைகளை குறைத்து ஆரோக்கியமாக வாழ உதவும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல நல்ல ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ள உணவுகளை அதிகம் எடுத்து வர வேண்டும்.

இது மாகுலர் சிதைவை வேகமாக தடுக்கிறது. அதாவது கண்ணின் பார்வையைத் தெளிவாக்க உதவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உங்கள் கண்களைப் பாதுகாக்க வண்ணமயமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் மூலிகைகள் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.


நீண்ட நேரம் கணினி முன் வேலை செய்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

கரோட்டினாய்டுகள் உங்கள் பார்வைக்கு நல்லது. கரோட்டினாய்டுகள் கண்களின் ஆரோக்கியம் மற்றும் பார்வை தொடர்பாக அடிக்கடி குறிப்பிடப்படும் வார்த்தை. நமது விழித்திரையில் கரோட்டினாய்டுகளான லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற சில நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. காலப்போக்கில் இதன் இயற்கையான அளவுகள் குறைந்து போகும். இந்த நேரங்களில் இதன் அளவை அதிகரிக்க லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகமுள்ள காய்கறிகள், முட்டைகளை பயன்படுத்தலாம். கரோட்டினாய்டுகள் கண்களில் நிறமி அடர்த்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்து நோய்களை வர விடாமல் தடுக்க வேண்டும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட அழற்சி போன்ற நோய்கள் காலப்போக்கில் உங்கள் பார்வையை பாதிக்கும். பார்வை நரம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பார்வை குறைபாடு பிரச்சனைகள் மற்றும் பார்வை இழப்பை கூட ஏற்படுத்தும். எனவே எந்தவிதமான நாள்பட்ட நோய்களும் உங்களுடைய உடலில் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான பார்வைக்கும் உடற்பயிற்சிக்கும் முக்கிய பங்கு உள்ளது. நீங்கள் எந்த அளவிற்கு சரியான உடற்பயிற்சியை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுடைய பார்வையும் நன்றாக இருக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது போன்றவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். இந்த நவீன காலத்தில் பல வேலைகள் செய்ய பெரும்பாலும் கணினிக்கு முன்னால் நீங்கள் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு உங்கள் கண் ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்காது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் வேலை செய்யும் போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவது முக்கியம். டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் திரைகள் அதிக அளவில் கண்களை பாதிக்கும் நீல ஒளியை வெளியிடுகின்றன.

இது நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் ஒளிரும் திரைகளைப் பார்ப்பது கண்களை திணறடிக்கும். கண்ணாடியைப் பயன்படுத்தும் பொழுது உங்கள் கண்களின் ஆரோக்கியம் மேலும் மோசமாவதை தடுக்கலாம். நீங்கள் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகளில் வேலை செய்யும் போதும், விளையாடும் போதும் உங்கள் உங்கள் கண்களுக்கு நல்ல தரமான கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும்.

அதிக வெளிச்சமாக இருக்கக்கூடிய வெயில் நேரங்களில் நீங்கள் வெளியில் செல்லும் பொழுது சன்கிளாஸைப் பயன்படுத்துங்கள். கண்ணாடிகளை அணிவது அழகாக இருப்பது மட்டுமல்ல சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் UVA மற்றும் UVB கதிர்வீச்சுகளிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்கிறது. இது கண் பாதிப்பையும் தடுக்கலாம்.

நீண்ட நேரம் கணினி முன் வேலை செய்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!


கணினி முன்பு தொடர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் பொழுது நீங்கள் கணினி முன் அமரும் ஒவ்வொரு முறையும் 20-20-20 விதியை பின்பற்றுவது உங்கள் கண்களை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கும். இது கொஞ்சம் இடைவெளி எடுத்து உங்கள் கண் அழுத்தத்தை தடுக்க உதவும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கணினியிலிருந்து உங்கள் பார்வையை விலக்கி 20 அடி தொலைவில் குறைந்தது 20 வினாடிகளுக்குப் பார்க்க வேண்டும். தொடர்ந்து இந்த வழிமுறைகளை நீங்கள் செய்து வரும் பொழுது கணினி முன்னால் பல மணி நேரங்கள் அமர்ந்து வேலை பார்த்தாலும் பெரிய அளவிற்கு உங்கள் கண்கள் பாதிக்காது. தொடர்ந்து இதை தெரிந்து வைத்துக்கொண்டு கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Trending News

Latest News

You May Like