1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல் ஃபைனலில் விளையாட தோனிக்கு தடை!?

ஐபிஎல் ஃபைனலில் விளையாட தோனிக்கு தடை!?

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாட தடை விதிக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் 15 ஓவர்கள் முடிந்தப் பிறகு, அடுத்த ஓவரை வீச பதிரனா தயாரானார். ஆனால் அவரை நடுவர்கள் தடுத்து நிறுத்தினர். ஏனென்றால் 15ஆவது ஓவரின்போது பதிரனா பீல்டிங் செய்யவில்லை.

8 நிமிடங்கள் வரை களத்திற்கு வெளியே நின்றிருந்தார். இதனால், அடுத்த 8 நிமிடங்கள் வரை பதிரனாவால் பந்துவீச முடியாது என்ற விதியின் காரணமாக வேறு பௌலர் பந்துவீச வேண்டும் என நடுவர்கள் கூறினார்கள்.


ஐபிஎல் ஃபைனலில் விளையாட தோனிக்கு தடை!?

அப்போது, பதிரனா களத்திற்குள் வந்து 4 நிமிடங்கள் ஆகியிருந்தது. மீதி நான்கு நிமிடங்களை ஈடுசெய்ய நடுவர்களிடம் தோனி பேச்சுக்கொடுத்து, விதிமுறை குறித்து கேட்டறிந்தார். நேரம் சரியானதால், அதன்பிறகு பதிரனா பந்துவீச சென்றார்.

சிஎஸ்கே ஏற்கனவே 2 முறை, ஓவர்வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டு 2 முறையும் ஓவர்ரேட்டிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, குஜராத் அணிக்கு எதிராக, பதிரனாவால் சிஎஸ்கேவுக்கு ஓவர்ரேட் அபராதம் விதிக்கப்படும் சூழல் இருக்கிறது.

அப்படி விதிக்கப்பட்டால், தோனியால் பைனலில் விளையாட முடியாது. ஒரு சீசனில் மூன்றுமுறை ஓவர்ரேட் வார்னிங் விடப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டால், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.


ஐபிஎல் ஃபைனலில் விளையாட தோனிக்கு தடை!?

ஆகையால், தோனி கடைசிப் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், மிக முக்கிய போட்டி என்பதால் பெரும் சர்ச்சை வெடிக்கும் என்று அவ்வாறு ஐபிஎல் நிர்வாகம் முடிவு எடுக்காது என்றே கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like