15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு..!!

ஜான்சன் & ஜான்சன் பவுடர் காரணமாக ஒரு அரிய வகை புற்றுநோயான மீசோதெலியோமா காரணமாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய கனெக்டிகட் நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு நடுவர் மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்திய மதிப்பில் 126 கோடி ரூபாயை அந்த நிறுவனம்.. அவருக்கு செலுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரான இவான் ப்ளாட்கின், 2021 ஆம் ஆண்டில் தனக்கு இந்த கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மனுவில் கூறியள்ளார். தனக்கு இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மருத்துவ சோதனைகளை செய்துள்ளார். ஜே&ஜேவின் பேபி பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு இந்த கேன்சர் வந்ததை சோதனைகள் மூலம் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து அந்த நிறுவனம் காரணமாகவே தான் கேன்சர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி, அந்த நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்.
ஃபேர்ஃபீல்ட் கவுண்டி, கனெக்டிகட் சுப்பீரியர் கோர்ட்டில் உள்ள நடுவர் மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜான்சன் & ஜான்சன் பவுடர் காரணமாக ஒரு அரிய வகை புற்றுநோயான மீசோதெலியோமா காரணமாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய கனெக்டிகட் நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.