வெற்றியுடன் கணக்கை தொடங்கிய குஜராத்!!
ஐபிஎல் சீசன் 16இல் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியில் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 80 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் ஷமி, ரஷித் கான், அல்சரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான சாஹா, சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். சாஹா 16 பந்துகளில் 25 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.
சுப்மன் கில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். கில் அவுட்டான பிறகு சாய் சுதர்சன், பாண்டியா ஆகிய இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து விஜய் சங்கர், ரஷித் கான் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டார்.
newstm.in