1. Home
  2. விளையாட்டு

தன் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விராட் கோலி

தன் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விராட் கோலி

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அனுஷ்கா சர்மாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தனது மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பதிவில் விராட் கோலி, நீ செல்லமாக கோபம் கொள்ளும் நாட்கள் உள்பட எல்லா நாட்களிலும் உன்னை நேசிக்கிறேன். எனக்கு எல்லாமுமாக இருப்பவளுக்கு இன்று பிறந்தநாள்.. என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர் அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிக்கு வாமிகா என்ற மகள் கடந்த 2021-ம் ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Trending News

Latest News

You May Like