1. Home
  2. விளையாட்டு

‘தல’ தோனிக்கு 41 அடி உயர கட் அவுட்- ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

‘தல’ தோனிக்கு 41 அடி உயர கட் அவுட்- ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 41ஆவது பிறந்த நாள். இதனால் சமூக வலைத்தளங்களை திறந்தாலே தல தோனி தான் தெறிக்கவிடுகிறார்.

கேப்டன்ஷிப்பில் தனித்திறமை, உலக அளவில் சிறந்த பினிஷர் உள்பட கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். இதனால் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘தல’ தோனிக்கு 41 அடி உயர கட் அவுட்- ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

இதற்கு மேலாக அவருக்கு 41 வயதான நிலையில், அதே உயரத்தில் கட்அவுட் வைத்து பிரமிக்கவைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். நடிகர்களுக்குத்தான் கட் அவுட் வைக்க வேண்டுமா என்ன? இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்ற தோனிக்கு வைப்பது சரிதானே என்கின்றனர் ரசிகர்கள். விஜயவாடா மாவட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரசிகர்கள், முன்னாள் இந்திய கேப்டனை கவுரவிக்கும் தோனி ரசிகர்கள், தோனிக்கு 41 அடி கட்அவுட்டை வைத்து வியக்கவைத்துள்ளனர்.

2011 உலகக்கோப்பையில் அடித்த கடைசி வெற்றி சிக்சர் ஷாட் தான் கட் அவுட்டில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடி கடைசிக்குச் சென்ற சிஎஸ்கே 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Trending News

Latest News

You May Like