1. Home
  2. விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை வென்றது இலங்கை..!!

பாகிஸ்தானை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை வென்றது இலங்கை..!!

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேறின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் பனுகா ராஜபக்சா, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Pakistan

அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடியா பனுகா ராஜபக்ச அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பாகிஸ்தான். ஆனால் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. கேப்டன் பாபர் அசாம், 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து வந்த ஃபாக்கர் ஜாமான் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பிரோமத் மதுசூதன்.

Srilanka

தொடர்ந்து வந்த இஃப்திகர் உடன் 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணியை மதுசூதன் மீண்டும் தகர்த்தார். பின்னர் நவாஸ், ரிஸ்வான், ஆசிஃப் அலி, ஷா, ஷதாப் கான், நதீம் ஷா, ராஃப் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது பாகிஸ்தான். இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

Trending News

Latest News

You May Like