1. Home
  2. விளையாட்டு

#JUST IN : இந்தியா ஆல் அவுட்.. 109 ரன்களுக்கு சுருண்டது..!!

#JUST IN : இந்தியா ஆல் அவுட்.. 109 ரன்களுக்கு சுருண்டது..!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியன் 109 ரன்களுக்கு சுருண்டது.

போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுக்மன் கில் 21 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த புஜாரா 1 ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 22 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் 3 ரன்னிலும், உமேஷ் யாதவ் 17 ரன்னிலும், முகமது சிராஜ் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 4 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like