1. Home
  2. விளையாட்டு

குளமாக மாறிய மைதானம்.. டி20 கோப்பையை பகிர்ந்துகொண்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா !!

குளமாக மாறிய மைதானம்.. டி20 கோப்பையை பகிர்ந்துகொண்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா !!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது.

போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மகாராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மைதானத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மைதானப் பொறுப்பாளர்கள் ஆடுகளத்தை மழைநீர் நனைக்காமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடினர். பின்னர் சில நிமிடங்கள் வெளுத்து வாங்கியது. சில நிமிடங்கள் வெளுத்து வாங்கினாலும் மைதானமே குளமாகும் அளவுக்கு மழை பெய்தது. பின்னர் மழை நின்றவுடன் அந்த தண்ணீரை விரைவாக வெளியேற்றும் பணிகளும் வேகமாக நடைபெற்றன.

குளமாக மாறிய மைதானம்.. டி20 கோப்பையை பகிர்ந்துகொண்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா !!

இதையடுத்து திட்டமிட்டதை விட 50 நிமிடங்கள் தாமதமாக 7.50 மணிக்கு ஆட்டம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 19 ஓவர்களுக்கு மட்டுமே ஆட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.

போட்டி தொடங்கியதும் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் முதல் ஓவரில் 2 சிக்சர்களை அடித்தார். பின்னர் நிகிடி பந்துவீச்சில் 15 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ருதுராஜ் 10 ரன்களில் வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் களத்தில் இருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 3.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

குளமாக மாறிய மைதானம்.. டி20 கோப்பையை பகிர்ந்துகொண்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா !!

பின்னர், ஆட்டத்தை 5 ஓவர்களாக குறைத்து விளையாட நடுவர்கள் தரப்பு முடிவெடுத்தனர். ஆனால் முன்பைப் போலல்லாமல் மழை வெளுத்து வாங்கியதை அடுத்து ஆட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா ஆட்டத்தை வென்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் தென்னாப்ரிக்க கேப்டன் மகாராஜ் இருவரும் கோப்பைக்கு ஒன்றாக போஸ் கொடுத்தனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like