தெ.ஆ-க்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 | 

தெ.ஆ-க்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கன மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது. 

அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவின் குயின்டன் அரைசதம் எடுத்தார். இந்தியா சார்பில் தீபக் சாகர் அதிகபட்சமாக 2 விக்கெட்டை வீழ்த்தினார். 150 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP