1. Home
  2. விளையாட்டு

இந்திய அணியில் இருந்து கோலி நீக்கம்..!

இந்திய அணியில் இருந்து கோலி நீக்கம்..!

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

டி 20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, சாஹல் பெயர்கள் இடம் பெறவில்லை. விராட் கோலி, பும்ரா, சாஹல் ஆகியோர் அணியில் இடம் பெறாததன் காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ வெளியீட்டில் எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை.

இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், அஷ்வின், பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்.

Trending News

Latest News

You May Like