ஐ.எஸ்.எல்: கேரளவுடன் டிரா செய்தது சென்னை!

சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய போட்டி, கோல் எதுவும் அடிக்காமல் டிரா ஆனது.
 | 

ஐ.எஸ்.எல்: கேரளவுடன் டிரா செய்தது சென்னை!

சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய போட்டி, கோல் எதுவும் அடிக்காமல் டிரா ஆனது. 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான சென்னையின் எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் போட்டி நேற்று நடைபெற்றது. சொதப்பலாக ஆடிவரும் சென்னையின் எப்சி அணி, இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முதல் 10 நிமிடங்களில் கேரள வீரர்கள் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கி கோல் அடிக்க முயற்சி செய்தனர். பல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், பந்தை கோலுக்குள் தள்ள முடியாமல் இரு அணிகளும் வீணடித்தன.

முதல் பாதி 0-0 என டிரா ஆனது. இரண்டாவது பாதியில், சென்னை ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் அட்டாக் வீரர்கள் திணறினர். கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. போட்டி டிராவில் முடிந்தது. இந்த முடிவை தொடர்ந்து இரு அணிகளும் 9 போட்டிகள் விளையாடி, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஐ.எஸ்.எல் பட்டியலில் ஏழாவது இடத்தில் கேரள அணி 8 புள்ளிகளுடனும், 8வது இடத்தில் சென்னை அணி 5 புள்ளிகளுடனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP