5 பந்துகளில் 16 ரன்கள்: வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜா!

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணி, இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில், ஆறு பந்துகளில், 17 ரன்கள் எடுத்த ஜடேஜா, சென்னையின் வெற்றிக்கு வித்திட்டார்.
 | 

5 பந்துகளில் 16 ரன்கள்: வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜா!

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணி, இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில், 5 பந்துகளில், 16 ரன்கள் எடுத்த ஜடேஜா, சென்னையின் வெற்றிக்கு வித்திட்டார். 

இன்றைய போட்டியின் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரின் முதல் பந்தை ரெய்னா எதிர்கொண்டு, சிங்கிள் தட்டினார். அடுத்து பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா, அடுத்தடுத்து 3 பவுன்டரிகள் அடித்தார். பின் இரண்டு ரன்கள் மற்றும் கடைசி பந்தில் ஒரு ரன் என, 5 பந்துகளில், 16 ரன்கள் எடுத்தார் ஜடேஜா. 

இதன் மூலம் வெற்றிக்கு தேவையான இலக்கு வெகுவாக குறைந்தது. கடைசி நேரத்தில் ஜடேஜா வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தால், சென்னை அணி, மிக எளிதாக வெல்ல முடிந்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP