1. Home
  2. விளையாட்டு

போலந்தை நாக் அவுட் செய்தது கொலம்பியா! ஜப்பான் செனகல் டிரா

போலந்தை நாக் அவுட் செய்தது கொலம்பியா! ஜப்பான் செனகல் டிரா

உலகக் கோப்பையின் குரூப் எச்-சில் நேற்று நடைபெற்ற போட்டியில் போலந்தை 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்திய கொலம்பியா, இந்த உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இளம் நட்சத்திரங்கள் பலரை கொண்ட பலம்வாய்ந்த கொலம்பியா அணி, இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில், ஜப்பானிடம் துரதிர்ஷ்டவசமாக தோற்றது. அடுத்தடுத்த போட்டிகளில் வெல்லவேண்டிய கட்டாயத்திற்கு கொலம்பியா தள்ளப்பட்ட நிலையில், ஐரோப்பிய அணியான போலாந்திடம் மோதியது. லேவன்டவ்ஸ்கி போன்ற நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும், முதல் போட்டியில் போலந்து செனகலிடம் தோற்றது. அதனால், இந்த போட்டியில் கொலம்பியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது போலந்து.

ஜேம்ஸ் ராட்ரிகெஸ், ஃபல்காவோ, க்வட்ராடோ போன்ற டாப் வீரர்களை கொண்ட கொலம்பியா, ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து போலந்து டிபென்சுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர் கொலம்பியா வீரர்கள். முதல் பாதியில் 40வது நிமிடத்தின் போது கொலம்பியாவுக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்தி, போலந்து வீரர்களை குழப்பி கொலம்பியா வீரர்கள் விளையாட, எர்ரி மீனா கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கொலம்பியாவின் ஃபல்காவோ 70வது நிமிடத்தில் கோல் அடித்தார். 75வது நிமிடத்தில், க்வட்ராடோ கோல் அடிக்க, போட்டி 3-0 என முடிந்தது.

இந்த வெற்றியால், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கொலம்பியா அதிகரித்துள்ளது. இரண்டு போட்டிகளில் தோற்றுள்ள போலந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இதே குரூப்பை சேர்ந்த ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதிய போட்டி, 2-2 என டிராவில் முடிந்தது. 11வது நிமிடத்திலும் செனகலின் மானே அடித்த கோலை, இனுயி சமன் செய்தார். இரண்டாவது பாதியில் மீண்டும் செனகலின் வாகே கோல் அடித்தார். ஆனால், 78வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹோண்டா போட்டியை சமன் செய்தார்.

அடுத்து நடைபெறும் போட்டிகளில், போலந்தை சந்திக்கும் ஜப்பானும்; கொலம்பியவை சந்திக்கும் செனகலும் டிரா செய்தால் போதுமானது. அடுத்து சுற்றுக்கு ரூ அணிகளும் முன்னேறும். ஆனால், கொலம்பியா வெற்றி செனகலை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

newstm.in

Trending News

Latest News

You May Like